சார்லஸ் ஏஞ்சல்ஸ். கவர்ச்சியும், காமெடியும், கண்களை விரிய வைக்கும் ஆக்சனும் நிறைந்த படம். கேமரூன் டயஸ், ட்ரூ பார்மோர், லூசி லு நடித்தப் படம். இதன் இரண்டாவது பாகத்திலும் இவர்களே நடித்தனர்.
சார்லஸ் ஏஞ்சல்ஸில் நடித்ததை மறக்க முடியாது என கூறியிருக்கிறார் பார்மோர். தன்னுடைய பெஸ்ட் ஃபரெண்ட் கேமரூன் டயஸ் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சார்லஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி, படத்தின் அடுத்தப் பகுதி விரைவில் தயாராக இருக்கிறது. நடிகைகளில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் கேமரூன் டயஸ், லுhசி லு ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக பார்மோர் தெரிவித்துள்ளார்.