81வது ஆஸ்கர் ப‌ரிந்துரை பட்டியல்

ஹாலிவுட் சினிமாவின் மதிப்பு மிகுந்த விருது, ஆஸ்கர். உலகம் முழுமைக்குமான விருதாகவோ, உலகின் அதிகபட்ச பெருமைக்கு‌ரிய விருதாகவோ ஆஸ்கரை கருத முடியாது. காரணம் அனைவரும் அறிந்தது. ஹாலிவுட் படங்கள் மட்டுமே இந்த விருதுப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். மற்றப் படங்களுக்கு‌ப் போனால் போகிறது என்று ஒரேயொரு விருது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பெய‌ரில்.

81வது ஆஸ்கர் விருதுக்கான ப‌ரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்லம்டாக் மில்லியனர் இந்தியாவை மையமாகக் கொண்ட படம் என்றாலும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருப்பதால் பத்து பி‌ரிவுகளில் விருதுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டேவிட் பின்ச‌ரி‌ன், தி கூ‌ரியஸ் கேஸ் ஆஃப் பட்டன் மொத்தம் பதிமூன்று பி‌ரிவுகளில் ப‌ரிந்துரைக்கப்பட்டு இந்த வருடத்தின் மேன் ஆஃப் தி மேட்ச் பெருமையை பெறுகிறது. சிறந்த நடிகைக்கான விருதுப் போட்டியில் ஏகப்பட்ட கலர்கள். பெனலோப் குரூஸ், கேட்வின்ஸ்லெட், ஏஞ்சலினா ஜோலி, ஆனி கேத்வே... என்ன தலை கிறுகிறுக்கமே. இதில் யார் அந்த அரையடி விருதை வாங்கப் போவது என்பது அடுத்த மாதம் 22ம் தேதி தெ‌ரிந்துவிடும்.

சிறந்த நடிகருக்கான போட்டியில் ஏஞ்சலினா ஜோலியின் காதல் கணவர் பிராட்பிட்டும் இருக்கிறார். சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட விருதுப் போட்டியில் இடம்பெற்றிருக்கும் படங்கள் தரத்தில் குறைந்தவை என குறைபடுகிறார்கள் விமர்சகர்கள். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்கு குறைவில்லை. ஆஸ்கர் அல்லவா?

வெப்துனியாவைப் படிக்கவும்