இறந்த பிறகும் ஆஸ்காருக்கு பரிந்துரை

"தி டார்க் நைட்" என்ற பேட்மென் திரைப்படத்தில் வில்லத்தனமான கோமாளி வேடமிட்ட மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜர் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உயிரோடு இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பலர் நல்ல நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்படுவதில்லை.

இந்த நிலையில் இறந்த பிறகு ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் இந்த ஆஸ்ட்ரேலிய நடிகர்.

28 வயதேயான ஹீத் லெட்ஜர் என்ற இந்த நடிகர் மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை தெரியாத்தனமாக அதிக அளவில் எடுத்துக் கொண்டு மரணமடைந்தார்.

இதுவரை இறந்த பிறகு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கலைஞர்களின் எண்ணிக்கை ஆறு.

இதில் 1976ஆம் ஆண்டு "நெட்வொர்க்" என்ற திரைப்படத்தின் பீட்டர் ஃபின்ச் என்பவருக்கு மட்டுமே இறந்த பிறகு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

ஹீத் லெட்ஜருக்கு ஆதரவு அதிகம் இருந்தாலும், விருது கிடைப்பது கடினம்தான் என்று கூறுகிறது ஹாலிவுட் வட்டாரங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்