ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகள் உலகின் சிறந்த திரைப்பட படைப்பாக்கங்களுக்கு விருது வழங்கி அழகு பார்க்கின்றன. ஆனால் சிறந்த மோசமான திரைப்படத்திற்கு விருது வழங்கி மகிழும் போக்கை நாம் இது வரை பார்த்திருக்க மாட்டோம்.
ஆம்! ராஸ்ஸீ விருதுகள் என்ற ஒன்று சிறந்த மோசமான படங்கள், மோசமான இயக்குனர், மோசனான நடிகர், நடிகையர் என்று இதற்கும் தேர்வுகளை நடத்துகிறது.
அந்த வகையில் 29வது ராஸ்ஸி விருதுகளுக்கு மைக் மையர்சின் "தி லவ் குரு" என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை இந்த அறிவிப்பு வெளியானது.
அதாவது ஆஸ்கார் அறிவிப்புகளுக்கு ஒரு நாள் முன்னால் இது வெளியாகியுள்ளது. ஆஸ்கார் விருதுகளை கடும் கிண்டல் செய்வது போல் உள்ளது இந்த நடவடிக்கை.
இந்த ஆண்டின் சிறந்த மோசமான திரைப்படத்திற்கும் போட்டா போட்டி இல்லாமல் இல்லை. "தி ஹேப்பெனிங்" "ஹாட்டி அன்ட் நாட்டி", "தி நேம் ஆஃப் தி கிங்" "மீட் தி ஸ்பார்டான்ஸ்" என்று போட்டிகள் இருந்தது.
சிறந்த மோசமான நடிகை விருதிற்கு ஜெசிகா ஆல்பா, கேமரூன் டைஅஸ், கேட் ஹட்சன் என்று போட்டி இருந்தது.
இந்தியாவிலும் இதனை முயன்றால் நாம் பெருமை பேசும் படங்கள் அனைத்தும் இந்தப்பட்டியலில் வந்துவிடும்.