வார்னர் பிரதர்ஸ் ஆட் குறைப்பு

அமெரிக்க திரைப்பட தயாரிப்பின் முன்னணி நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் உலகம் முழுதும் உள்ள அந்த நிறுவனத்தின் பணியாளர்களில் 10 சதவீதத்தினரை வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது.

அதாவது சுமார் 800 பணியாளர்கள் வேலையிழக்கலாம் என்று தெரிகிறது.

அமெரிக்காவில் துவக்கி வைக்கப்பட்ட உலகபபொருளாதார நசிவு அங்குள்ள சினிமாத் துறையையும் விட்டு வைக்குமா என்ன? அதனால் செலவுகளை கட்டுப்படுத்த வார்னர் பிரதர்ஸ் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிந்து பங்கு ஒன்றிற்கு 8.94 டால‌ர்களாக குறைந்துள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் நிறுவனம் ஆண்டொன்றிற்கு 50 மில்லியன் டாலர்கள் மிச்சப்படுத்துகிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

இத்தனைக்கும் 2008ஆம் ஆண்டு அந்த நிறுவனம் "டார்க் நைட்", "செக்ஸ் அன்ட் தி சிட்டி", "கெட் ஸ்மார்ட்" மற்றும் "ஃபோர் கிறிஸ்மஸ்" ஆகிய திரைப்படங்களின் மூலம் உலக அளவிலான வருவாயாக 1.77 பில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது.

எவ்வளவு லாபங்கள் குவித்தாலென்ன, பொருளாதார நசிவு என்றால் முதலாளிகள் கண்களில் முதலில் தென்படுவது பணியாளர்கள்தானே!

வெப்துனியாவைப் படிக்கவும்