"ஹம்ப்டே"யிற்கு போட்டா போட்டி

லென் ஷெல்டனின் ஹாலிவுட் காமெடி திரைப்படமான "ஹம்ப்டே"யின் உலகளாவிய வினியோக உரிமையைப் பெறுவதில் அமெரிக்க வினியோகஸ்தர்களிடையே கடும் போட்டா போட்டி நிலவியது.

கடைசியில் மங்கோலியா பிக்சர்ஸ் ஒரு 6 இலக்கத் தொகையை கொடுத்து இந்த உரிமைகளை கைப்பற்றியது.

சுமார் 6 வினியோக நிறுவனங்கள் இந்த உரிமைகளை பெற கடும் போட்டியிட்டன. மார்க் டுப்லாஸ், ஜோஷுவா லியோனார்ட் நடித்த இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று சன் டான்ஸ் திரைப்பட விழாவில் போட்டித் திரைப்படப் பிரிவில் திரையிடப்பட்டது.

அப்படி இந்தத் திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? எல்லாம் வழக்கமான விஷயம்தான். மார்க் டுப்லாஸும், ஜோஷுவா லியோனார்டும் தாங்கள் உடலுறவு கொள்வதை தாங்களே படம் பிடிக்கின்றனர்! ஆர்ட் புரோஜெக்ட் ஒன்றிற்காக இதனை அவர்கள் செய்கிறார்களாம்!

இது போதாதா போட்டாப் போட்டிக்கு?

வெப்துனியாவைப் படிக்கவும்