ரோபோ நடிகர் பாப் மே மரணம்

"லாஸ்ட் இன் ஸ்பேஸ்" திரைப்படப் புகழ் பெற்ற நடிகரும், விஞ்ஞான புனைகதை தொலைக்காட்சி மெகாத் தொடரில் ரோபோவாக நடித்து புகழ் பெற்றவருமான பாப் மே காலமானார். அவருக்கு வயது 69.

கலிஃபோர்னியாவில் உள்ள லன்காஸ்டர் கம்யூனிட்டி மருத்துவமனையில் இவர் மாரடைப்பால் காலமானார்.

புகழ் பெற்ற, காலஞ்சென்ற காமெடி நடிகர் சிக் ஜான்சனின் பேரனான பாப் மே தனது தொலைக்காட்சி நடிப்பை ஒரு சண்டை நிபுணராகவே துவங்கினார்.

சிறந்த பொது மேடைப் பேச்சாளராகவும் விளங்கிய பாப் மே உலகின் சிறந்த காமெடி நடிகராக கருதப்படும் ஜெர்ரி லூயிஸ் 1980ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த "ஹார்ட்லி வொர்க்கிங்" என்ற படத்தில் கோமாளி வேடமிட்டு நடித்தார்.

1960ஆம் ஆண்டுகளில் இவரது புகழ் நடிப்புலகில் உச்சம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்