ஹாரிபாட்டரில் நடித்த எம்மா வாட்சனுக்கு என்ன வயதிருக்கும்? நம்மூர் கணக்குப்படி ஓட்டு போடும் வயது. அதாவது பதினெட்டு. இந்த சின்ன வயதில் சீரியஸான முடிவெடுத்திருக்கிறார், வாட்சன். புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்கப் போகிறாராம்.
இத்தாலியின் புகழ்பெற்ற இயக்குனர் பெர்னார்டோ பெர்டோலுசி. கொஞ்சம் விவகாரமான இயக்குனர். தி லாஸ்ட் எம்பரர் போன்ற காவியங்களை படைத்தவர். அதனாலேயே இவரது இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் போட்டி போடுகின்றனர்.
மார்லன் பிராண்டோ, லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்ற இவரது படத்தில் நடித்திருக்கிறார். எப்படி? முழு நிர்வாணமாக. அப்பட்டமான நிர்வாண காட்சிகள் நிறைந்த இந்தப் படம் பெரும் சர்ச்சையை இது வெளியான போது கிளப்பியது. இவரது புதிய படத்தில்தான் நிர்வாணமாக நடிக்கிறார், வாட்சன்.
இது தேவையா என்று கேட்டதற்கு, பெர்னாடோவின் படம் என்பதால் ஒத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார், வாட்சன். பெர்னாடோ பெர்டோலுசிக்கு இப்போது வயது அறுபத்தியெட்டு.