ஜெனிபர் அனிஸ்டனின் டே அவுட்!

சனி, 15 நவம்பர் 2008 (11:20 IST)
பிரிந்தவர் கூடுவதும், கூடியவர் பிரிவதும் ஹாலிவுட்டில் ரொம்ப சகஜம். நடிகை ஒருவரின் முன்னாள் கணவரும், இன்னாள் கணவரும் நட்பு பாராட்டும் டேக் இட் ஈஸி பூமி அது.

ஜெனிபர் அனிஸ்டனின் கதை கொஞ்சம் சுவாரசியமானது. இவர் தனது கணவர் ஜான் மேயரை கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் கழற்றிவிட்டார். கல்யாண பந்தத்தில் ஏற்பட்ட கசப்புதான் காரணம்.

தற்போது ஜெனிபர் அனிஸ்டன் வேறொருவரை தேர்ந்தெடுத்திருப்பார் என்றுதானே நினைக்கத் தோன்றும்? அதுதான் சுவாரசியமே.

தான் கழற்றிவிட்ட முன்னாள் கணவருடன்தான் தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறார். இருவரும் சமீபத்தில் பிக்னிக் சென்றனர். பொழுதை உல்லாசமாக கழித்த அவர்கள், திருமணமான போது இருந்ததைவிட அதிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக கூறியிருக்கிறார், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்.

முன்னாள் கணவருடன் தனக்கு எந்த பகையும் இல்லை என தெரிவித்துள்ளார் ஜெனிபர். பிறகு ஏன் டைவர்ஸ் செய்ய வேண்டும்?

அதுதான் ஹாலிவுட்.

வெப்துனியாவைப் படிக்கவும்