ஹாலிவுட் பியூட்டி லின்ட்சே லோகனுக்கு என்ன வயது இருக்கும்? இருபத்தைந்து...? முப்பது...? இரண்டும் இல்லை. வெறும் இருபத்திரண்டுதான் ஆகிறது.
இந்த வயதில் அவர் அமெரிக்கர்களுக்கு அளித்திருக்கும் அதிர்ச்சி சாதாரணமானதல்ல. லின்ட்சேக்கும் சமந்தா என்பவருக்கும் ரொம்ப நாளாகவே நட்பு இருந்து வருகிறது.
இருவரும் ஒன்றாகவே எங்கும் செல்வார்கள். இது பலருக்கும் சந்தேகத்தை கொடுத்தது. ஆனால் வெளிப்படையாக கேட்க முடியாத நிலை.
இதற்கெல்லாம் லின்ட்சேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நானும் சமந்தாவும் நீண்ட காலமாக நண்பர்கள், ஆமாம் நாங்கள் லெஸ்பியன்கள்தான் என்று உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.
உண்மை வெளிப்படையாக தெரிந்து போனதால் பத்திரிகைகளுக்கு சுவாரஸிம் குறைந்துப் போயுள்ளது.
இதில் இன்னொரு சுவாரஸியம் சமந்தாவுக்கு லின்ட்சேயைவிட ஏறக்குறைய பத்து வயது அதிகம்.