சினிமாவில் பின்லேடன்!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (20:07 IST)
பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனே, சர்வதேச பயங்கரவாதியான பின் லேடன் பற்றி ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

பின் லேடனிடம் பல ஆண்டுகளாக கார் டிரைவராக இருந்தவர் சலீம் ஹாம்டன். ஏழு ஆண்டுகளுக்கு முன் பின்லேடனைத் தேடிப்போன ராணுவம் சலீம் ஹாம்டனை சுற்றி வளைத்து அமெரிக்க சிறையில் தள்ளியது.

அவர் சார்பாக வாதாடிய அரசு வக்கீல் பின் லேடனிடம் கார் டிரைவராக மட்டும்தான் இவர் இருந்தார். வேறு குற்றங்கள் செய்யவில்லை என்று வாதாடினார். ஆனால், நீதிமன்றம் சலீம் ஹாம்டன் குற்றவாளிதான் என்று தீர்ப்பு கூறி பைலை மூடியது.

இந்த வழக்கை ஆரம்பம் முதல் இறுதி வரை கவனித்து வந்த ஜோனாதன் மஹலெர் என்ற பத்திரிக்கையாளர் 'தி சேலஞ்ச்' என்ற பெயரில் இந்த விசாரணையை புத்தகமாக வெளியிட்டார். அந்த நூலை பல கோடி ரூபாய் கொடுத்து உரிமையை வாங்கி படமாக்க எண்ணியிருக்கிறார்.

அத்துடன் அமெரிக்க கப்பல் படையின் கமாண்டர் வேடத்திலும் நடிக்க இருக்கிறார். எனவே பின் லேடனை அமெரிக்காகாரம் எப்படி சித்தரிக்கப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றன பின் லேடனின் ஆதரவு நாடுகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்