மீண்டும் இணைந்த முன்னாள் ஜோடி!
சனி, 21 ஜூன் 2008 (17:02 IST)
தொண்ணூறுகளில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோடி, டாமி லீ ஜோன்ஸ்- பமீலா ஆண்டர்சன். இருவரும் திருமணம் செய்து கொண்டு அதிக நாள் குடும்பம் நடத்தவில்லை. 1998ல் இந்த ஜோடி பிரிந்தது.
அதற்குப் பிறகு இரண்டு பேரை திருமணம் செய்தார் பமீலா ஆண்டர்சன். அதுவும் நிலைக்கவில்லை.
இந்நிலையில் ஆச்சரியப்படும் விதமாக டாமி லீ ஜோன்சும், பமிலாவும் இணைந்துள்ளனர். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜோன்ஸ், குழந்தைகளும், பமீலாவும் வந்தது ரொம்ப சந்தோஷம். உண்மையிலேயே இது நல்லா இருக்கு என பரவசப்பட்டார்.
குழந்தைகளின் விருப்பம் மற்றும் சந்தோஷத்திற்கு ஜோன்சும், பமீலாவும் முன்னுரிமை கொடுக்க தீர்மானித்துள்ளனர். இதனால், இந்த உறவு நீண்டு நீடிக்கும் என ஆருடம் சொல்கிறார்கள் ஹாலிவுட்டில்.
நாளையே காட்சி மாறினாலும் மாறலாம்!