கேன்ஸ் போனால் உலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரையும் ஒரேயிடத்தில் பார்க்கலாம். பெனலப் க்ரூஸ், மோனிகா பெலூசி, மைக் டைசன், ஹாரிசன் ஃபோர்டு, ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க், ஜாக்கிசான், நம்மூர் ஐஸ்வர்யா ராய்... மொத்தமாக எழுத நூறு குயர் நோட் தேவை.
இவர்கள் அனைவரையும் விட ஆடியன்ஸை கவர்ந்தவர்கள் இருவர். ஏஞ்சலினா ஜோலியும் அவரது கணவர் பிராட் பிட்டும்!
விரைவில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கப் போகும் ஜோலி நிறைமாத கர்ப்பத்துடன் கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்டார். அவர் போகிற இடமெல்லாம் அவரது நிழலாக கவணர் பிராட்பிட்.
இந்த நட்சத்திர தம்பதியின் அன்னியோன்யத்தைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் இல்லை. ஹாலிவுட்டில் சேர்ந்திருப்பதுதான் ஆச்சரியம். பிரிந்திருப்பது சாதாரணம். ஏஞ்சலினா ஜோலி-பிராட்பிட் ஜோடி இதனை மீண்டும் நிரூபித்திருக்கிறது.