ஷுகர் பிரச்சனையில் ஜோலி!
புதன், 2 ஏப்ரல் 2008 (17:42 IST)
விரைவில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போகிறார் ஏஞ்சலினா ஜோலி. கர்ப்பமாக இருப்பதை விரும்புகிறேன் என்று தாய்மைக்குரிய பூரிப்புடன் சொன்ன, ஜோலிக்குப் புதிய பிரச்சனை, ஷுகர் வடிவில் வந்துள்ளது.
பிரசவ காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் சர்க்கரையின் அளவு கூடிவிடும். ஜோலிக்கு இந்த அளவு சற்று கூடியிருக்கிறது. அதுதான் பிரச்சனை.
கர்ப்பமாக இருக்கும் போது இன்சூலின் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிதான் சர்க்கரையை குறைக்க ஒரே வழி.
உணவில் கட்டுப்பாடு கொண்டு வரலாம். ஆனால், உடற்பயிற்சி? ஜோலியின் இந்த இக்கட்டான சூழல் புரிந்து, தனது ஷுட்டிங்கை கேன்சல் செய்து விட்டு, ஜோலியை கவனித்து வருகிறார் பிராட் பிட்.
ஹாலிவுட்டின் இப்போதைய உதாரண தம்பதிகள் இவர்கள்தான்!