மரணத்தின் விளிம்பில் பாட்ரிக் ஸ்வைஸ்!

சனி, 8 மார்ச் 2008 (12:51 IST)
பிரபலமானவர்கள் குறித்த கிசுகிசுக்கள், பரபரப்புச் செய்திகள் உலகமெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கிசுகிசு எழுதுபவர்கள், சம்பந்தப்பட்ட நபரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணர்வதில்லை. இதற்கு சரியான உதாரணம் ஹாலிவுட் நடிகர் பாட்ரிக் ஸ்வைஸ்.

ஐம்பத்தைந்து வயதான பாட்ரிக் கோஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு கணையப்புற்று நோய் இருக்கும் செய்தி சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றில் வெளியானது.

அவ்வளவுதான்! பாட்ரிக் இன்னும் ஐந்து வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்றெல்லாம் மீடியாக்கள் ஆருடம் சொல்லத் தொடங்கின.

ஆனால், பாட்ரிக்கிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவர் நலமாக இருப்பதாகவும், வேகமாக சகஜநிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

விரைவில் பாட்ரிக் புதிய படங்களில் நடிப்பார் என அவரது உதவியாளரும் நம்பிக்கை தெரிவித்தார். பத்திரிக்கைகள் குறித்த ஐந்து வார கெடுவைத் தாண்டியும்ட நலமாகவே உள்ளார் பாட்ரிக்.

பத்திரிக்கைகளுக்கு தேவையா இந்த மரண விளையாட்டு?

வெப்துனியாவைப் படிக்கவும்