நோ கன்ட்ரி.. படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள்!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (14:10 IST)
webdunia photoFILE
ஜோய்ஸ் கோன், ஈத்தன் கோன் ஆகியோர் இயக்கிய ‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்’ எனும் ஆங்கில படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது!

80வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடந்தது. அதில் உலகளவில் சிறந்த திரைப்படம் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படத்திற்கான விருது 'நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்' படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குநருக்கான விருது 'நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்' படத்தை இணைந்து இயக்கிய ஜோய்ல் கோன், ஈத்தன் கோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது 'தேர் வில் பி பிளட்' படத்தில் நடித்த டேனியல் டே-லெவிஸ்க்கும், சிறந்த நடிகைக்கான விருது 'லா வி என் ரோஸ்' படத்தில் நடித்ததற்காக மரியோன் டில்லார்டுக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகர் விருது 'நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்' படத்தில் நடித்த ஜேவியர் பார்டேமிற்கும், சிறந்த துணை நடிகை விருது 'மைக்கேல் கிளேடன்' படத்தில் நடித்த டில்டா ஸ்வின்டானுக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த அயல்நாட்டு திரைப்பட விருது ஆஸ்ட்ரிய நாட்டின் 'தி கவுன்டர்ஃபெய்டர்ஸ்' படத்திற்கும், சிறந்த அணிமேட்டடு பட விருது 'ரட்டடோயுல்லி' படத்திற்கும், சிறந்த ஆவணப்பட விருது 'டாக்ஸி டு த டார்க் சைடு'க்கும் கிடைத்துள்ளது.

சிறந்த திரைக்கதைக்கான விருது 'ஜுனோ' படத்திற்க்காக பிராட் பேர்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் 'நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்' படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்