'கிராஷ்' படத்தில் அமெரிக்கர்கள் வெளிநாட்டினரான வேற்று வேற்று இனத்தவர்களிடம் எப்படியெல்லாம் அத்துமீறுகிறார்கள், அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பதைச் சொன்னவர் பால் ஹாகிஸ்.
இவரது இன் தி வேலி ஆஃப் இலா, ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளையும், அதை செய்யும் ராணுவ வீரர்களின் உளவியல் சிக்கல்களையும் ஆராய்கிறது.
டாமி லீ ஜோன்ஸ் (மென் இன் பிளாக்கில் வில் ஸ்மித்தின் மேலதிகாரியாக மேலதிகாரியாக வருபவர்) முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஈராக் யுத்த முனையிலிருந்து திரும்பும் ஜோன்ஸின் மகன் மர்மமான முறையில் இறந்து போகிறான். அதற்கான காரணத்தை ஆராயும் போது அவனது செல்போன் மூலமாக, அமெரிக்க ராணுவத்தினர் - இறந்துபோன ஜோன்ஸின் மகன் உட்பட - ஈராக் மக்களை கொடுமைப்படுத்தி கொலை செய்வது தெரிய வருகிறது. அமெரிக்க ராணுவம் இந்த அத்துமீறல்களை மூடி மறைப்பதையும் பால் ஹாகிஸின் படம் சுட்டிக் காட்டுகிறது.
கிராஷ் படம் ஆஸ்கார் வென்றது. பால் ஹாகிஸின் இந்தப் படத்திற்கும் ஆஸ்கார் அதிர்ஷ்டம் வாய்க்கலாம்!