ஈராக்கில் ஏஞ்சலினா ஜோலி!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (18:44 IST)
பிரச்சனைக்குரிய படங்களில் நடிக்க விரும்பும் ஏஞ்சலினா ஜோலி, சென்ற வாரம் பிரச்சனைகள் பற்றி எரியும் பாக்தாத் நகரத்திற்கே சென்றார்.

அமெரிக்க அரசின் நல்லெண்ண தூதுவராக பாக்தாத் சென்ற ஜோலி, அங்குள்ள அமெரிக்க வீரர்களிடையே பேசினார். அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடமும், ஈராக் பிரதமரிடமும் ஜோலி ஓர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். போரினால் இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான ஈராக்கியர்களை பாதுகாப்புடன் மீண்டும் குடியமர்த்த வேண்டும் என்பதே அது.

ஜோலி இரண்டு விஷயங்களை மறந்துவிட்டார். அவர்கள் இடம்பெயரக் காரணமே அமெரிக்காவின் படையெடுப்புதான். இன்னொன்று அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருக்கும் வரை, பாதுகாப்பு என்பதும் மீண்டும் குடியேறுவது என்பதும் குருடன் கண்ட கனவு போல கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

ஜோலியின் மனிதாபிமானத்தில் யாரும் குறை காண முடியாது. அதனை அமெரிக்கப் படைகளிடமும் அவர் எதிர்பார்ப்பது தான் சிறந்த Irony!

வெப்துனியாவைப் படிக்கவும்