மடோனாவை மிஞ்சுவாரா ஜெஸிகா ஆல்பா!

Webdunia

செவ்வாய், 27 நவம்பர் 2007 (15:06 IST)
webdunia photoFILE
ஹாலிவுட் நடிகர்கள் அடுத்த ஆண்டு மத்தியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பா அடுத்த ஆண்டு பிராட்வே நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தம் செய்ய தயாராகி வருகிறார்.

இதனிடையே 2008 ஜூனில் ஸ்டிரைக் நடந்தால், அப்போது தம்மால் சும்மா இருக்க முடியாது என்று ஆல்பா அமெரிக்க தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதற்காக டேவிட் மேமட்ஸின் ஸ்பீட்-த-ஃப்ளோ -வில் நடிப்பது தொடர்பாக பேசி வருவதாகக் கூறினார். அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் நிலையில் கடந்த 1998-ல் நியுயார்க் நகரில் மடோனா தோன்றி கலக்கிய கரேன் கதாபாத்திரத்தில் ஆல்பா கலக்குவார் என்று கூறப்படுகிறது.

ஸ்டிரைக் நடைபெறும் நேரத்தில் தான் நாடகங்களில் தோன்ற இது வாய்ப்பாக இருக்கும் என்றும் ஆல்பா கூறினார். நியுயார்க் பக்கின் வெற்றியைத் தொடர்ந்து அவேக்-இன்-ஹர்லேம் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ள ஆல்பா தற்போது தீவிரமாக வீடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்