இண்டியானா ஜோன்ஸ் 4ல் நடிக்க மாட்டேன் : ஷான் கானரி!

Webdunia

வெள்ளி, 8 ஜூன் 2007 (16:01 IST)
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் 4 திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என்று முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் ஷான் கானரி கூறியுள்ளார்!

இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த லாஸ்ட் குருசேட் என்ற திரைப்படம் இதுவரை 3 தொடர் திரைப்படங்களாக வந்துள்ளது.

ஜார்ஜ் லூகாஸ் நடித்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் 3 பகுதிகளும் மிகச் சிறப்பாக ஓடின. இத்திரைப்படத்தின் கதாநாயகன் இண்டியானா ஜோன்ஸ் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்டின் தந்தையாக ஷான் கானரி நடித்தார்.

தற்பொழுது இப்படத்தின் 4வது தொடர் எடுக்கப்படுகிறது. இதில் தான் நடிக்கப் போவதில்லை என்று 76 வயதான ஷான் கானரி கூறியுள்ளார்.

இதற்கு ஷான் கானரி கூறியுள்ள காரணம்தான் கவனிக்கத்தக்கது :

"ஸ்டீவனுடனும், ஜார்ஜ் உடனும் பணியாற்றுவதை பெரிதும் விரும்புகிறேன். ஆனால் ஹாரிசன் எனது மகனாக ஹாரிசன் ஃபோர்ட் நடிப்பதுதான் பயங்கரமானது என்பதை நான் சொல்லத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்