காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

புதன், 12 மார்ச் 2014 (15:20 IST)
வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இந்தப் படத்தை வெற்றிமாறன் கட்டி காப்பாற்றியவிதம் சுவாரஸியமானது.
FILE

படத்தில் நடித்திருப்பது பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறுவர்கள். கமர்ஷியல் படம் என்றாலும் விருதையும் குறி வைத்து படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன். படத்துக்கு இசை ஜீ.வி.பிரகாஷ். இப்போதுதான் படம் கடைசிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கும் சிறுவர்களை வடசென்னை பக்கமிருந்து தேர்வு செய்தனர்.

இதுதான் அவர்களுக்கு முதல் சினிமா அனுபவம். ஒருநாள் படப்பிடிப்புக்கு வந்தால் அடுத்த நாள் அவர்களை வலைவீசித்தான் தேடிப்பிடிக்க வேண்டியிருந்திருக்கிறது. இதனால் பலநேரம் படப்பிடிப்பே தடைபடும் சூழல்.
FILE

இது சரிவராது என்று அத்தனை பேரையும் அள்ளிப்போட்டு தனது அலுவலகத்திலேயே தங்க வைத்தார் வெற்றிமாறன். வீட்டுக்கு அருகிலிருக்கும் பள்ளிக்கு வெற்றிமாறனின் அலுவலகத்திலிருந்து காரில் சென்று காரிலேயே திரும்பி வரவேண்டும். ஏறக்குறைய ஒரு வருடம் இதுபோல் சிறுவர்களை பராமரித்திருக்கிறார்கள்.

படம் எடுக்க இப்படியும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்