பாலா தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி

செவ்வாய், 11 மார்ச் 2014 (09:00 IST)
பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்துக்கு வசந்த குமாரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
FILE

பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் முதலில் தயாரித்த படம் மாயாவி. படம் தயாரிப்பில் இருக்கையில் எழுந்த சில பிரச்சனைகள் காரணமாக தாணுவின் பெயரில் அப்படம் வெளியானது.

பரதேசி படத்தை தொடங்கியவர் வேறnருவர் என்றாலும் பாதியில் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

இந்த முறை சுரேஷ் களஞ்சியத்தின் ஸ்டுடியோ 9 யுடன் இணைந்து வசந்த குமாரனை தயாரிக்கிறார். குடும்பப் பின்னணியில் அமைந்த காதல் படம் இது. படத்தை இயக்குகிறவர் ஆனந்த் குமரேசன் என்ற அறிமுக இயக்குனர். இவரே படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார்.

புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், இடம் பொருள் ஏவல், மெல்லிசை உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி ஏற்கனவே கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்