வீரம் ரீமேக்கில் சல்மான் கான்

திங்கள், 10 பிப்ரவரி 2014 (14:26 IST)
வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். தமன்னா நடித்த வேடத்தில் ஜாக்குலின் ஃபெர்னாண்ட்ஸ் நடிக்கலாம் என தெரிகிறது.
FILE

சல்மான் கானின் சமீபத்திய படம் ஜெய் ஹோ பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகவில்லை. இப்படம் முருகதாஸ் தெலுங்கில் இயக்கிய ஸ்டாலின் படத்தின் ரீமேக். ஜெய் ஹோவின் தோல்வியைத் தொடர்ந்து, சல்மான் கான் இனி தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடிக்க மாட்டார் என்ற செய்தியை ஹிந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் பரப்பின.

இதனை மறுத்த சல்மான் கான் தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் நடிக்கும் தனது விருப்பத்தை தெரியப்படுத்தினார். இதனால் உற்சாகமடைந்த ப்ரித்தீஷ் நந்தி (இவர்தான் வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியியுள்ளார்) சல்மான் கானிடம் வீரம் கதையைச் சொல்லி அவரின் சம்மதத்தை வாங்கியுள்ளார். ஹிந்திக்கு ஏற்ப படத்தின் ஸ்கிரிப்டை மாற்றுவதற்காக இயக்குனர் சிவா மும்பை சென்றுள்ளார். அவர்தான் ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகிறார்.

போக்கிரி படத்தை வான்டட் என்ற பெயரில் ஹித்தியில் ரீமேக் செய்து ஹிந்திக்கு சென்றார் பிரபுதேவா. விரைவில் காஞ்சனா ரீமேக் மூலம் ஹிந்திக்கு செல்லவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். வீரம் சிவாவை பாலிவுட்டில் கொண்டு சேர்த்திருக்கிறது.

பேச்சுவார்த்தை பேப்பரில் உறுதியான பிறகு படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்