ரஜினியுடன் மோதும் வடிவேலு

புதன், 5 பிப்ரவரி 2014 (15:26 IST)
பேட்டியின் போது கைகட்டி கூழைகும்பிடு போடும் வடிவேலின் நிஜமுகம் தனிமையில் பட்டொளி வீசும். பெரும்பாலும் அது தன்புகழ்ச்சியாகவே இருக்கும்.
FILE

இல்லையென்றால் தனது கேரியரில் மிகச்சிறந்த நகைச்சுவை வேடத்தை தந்த சுந்தர்.சியுடன் முட்டிக் கொள்வாரா இல்லை சிங்காரவேலனில் கவுண்டமணி சதா வடிவேலுவை உதைப்பதைப் பார்த்து உனக்கொரு வேடம் தர்றேன் என்று தேவர்மகனில் வடிவேலுவை பிரபலப்படுத்திய கமலை பகைத்துக் கொள்வாரா... இப்படி பல ராக்களை வடிவேலு விஷயத்தில் போட முடியும்.

இம்சை அரசன் வெளியான போதே அடுத்த டார்கெட் ரஜினிதான் என்ற மிதப்பு வடிவேலிடம் இருந்தது. இப்போது அதற்கான சந்தர்ப்பம் தகைந்திருக்கிறது.
FILE

தனது ஜெகஜால புஜபல தெனாலிராமனை ஏப்ரல் 11 கோச்சடையான் வெளியாகும் அதே தினத்தில் வெளியிட விரும்புகிறார் வடிவேலு. இந்த ஒருவரி செய்திக்கே உலகளவிய விளம்பரம் கிடைக்கும். தோற்றாலும் மலையுடன் மோதிய பெருமையும் வடிவேலுவுக்கே.

தேனாலிராமனை ஏஜிஎஸ் தயாரிக்கிறது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வை ராஜா வை யும் அவர்களின் தயாரிப்பே.

கோச்சடையான் வெளியாகிற அன்று அதுக்குப் போட்டியா என்னுடைய ஆனந்த தொல்லை வெளியாகும் என்றார் படாவதி ஸ்டார் சீனிவாசன். இப்போது வடிவேலு. காமெடியன்கள் ஏன் ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்