அர்ஜுன் ராம்பால் இல்லைன்னா இர்ஃபான் கான்

திங்கள், 3 பிப்ரவரி 2014 (20:39 IST)
வேலாயுதம் படம் சுமாராகப் போனதால் தனது ரிமேக் இமேஜை முழுமையாக கழற்ற துணிந்துவிட்டார் ஜெயம் ராஜா. தம்பி ஜெயம் ரவியை வைத்து அவர் இயக்கி வரும் புதிய படம் ராஜாவின் சொந்த ஸ்கிரிப்டாம் (படம் வெளியாகும்வரை இது உறுதியில்லை).
FILE

சென்னையில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்க இதன் படப்பிடிப்பு சில மாதங்கள் முன் ஆரம்பமானது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்வில்லை.

இதில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் ராம்பால் அல்லது இர்ஃபான் கான் இருவரில் ஒருவரை ஒப்பந்தம் செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். தமிழில் வில்லன் பஞ்சம் இருப்பதால் இப்போதெல்லாம் வடக்கேயிருந்துதான் வில்லன்களை இறக்குமதி செய்கிறார்கள்.

லிங்குசாமியின் அஞ்சானில் கால்டஜன் ஹிந்தி வில்லன்கள் நடிப்பதாக கேள்வி.

வெப்துனியாவைப் படிக்கவும்