நவரச வில்லன் கார்த்திக்

வெள்ளி, 31 ஜனவரி 2014 (15:22 IST)
FILE
நவரச நாயகனாக இருந்த நேரம் கால்ஷீட் சொதப்புவதன் மூலம் தயா‌ரிப்பாளர்களின் வில்லனாகவும் இரண்டு வேடம் செய்தவர் கார்த்திக். இப்போது வில்லனாகவே நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

வில்லனாக இருந்து ஹீரோவான சத்யரா‌ஜ் ‌ரிடையர்ட்மெண்ட் நிலையில் வில்லனாக நடிக்க மறுத்துவரும் வேளையில் ஹீரோவாக மட்டுமே நடித்த கார்த்திக் வில்லனாக நடிப்பது நகை முரண் என்பதுடன் நல்ல முரணும்கூட.

கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகனில் ஹீரோ தனுஷுக்கு இவர்தான் வில்லன். நான்கு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். நால்வரையும் சமாளிப்பது நமது நவரச வில்லன் கார்த்திக். மங்காத்தாவில் அ‌ஜித் மேக்கப்பில்லாமல் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த மாதி‌ரி நானும் இயல்பான தோற்றத்தில் நடிக்கிறேன் என்றிருக்கிறார் கார்த்திக்.

பிரச்சனை என்னவென்றால் கார்த்திக்கின் இயல்பான தோற்றம் எது என்பது சிதம்பர ரகசியம். தலைமுடி கொட்டி ஹேர் ட்ரான்ஸ்பிளான்டேஷன் செய்தார் என்று சில வருடங்கள் முன்பு செய்தி வந்தது மட்டும் நினைவிருக்கிறது.

தனது மகன் கௌதம் கார்த்திக்குக்கு வில்லனாகணும் என்பது கார்த்திக்கின் ஆசை.

அதுக்கு அவ‌ரின் கால்ஷீட்டை பார்த்தால் போதாது...?

வெப்துனியாவைப் படிக்கவும்