வெற்றிமாறன் ஐ.பி.எஸ். - தமிழனை துரத்தும் துரதிர்ஷ்டம்

சனி, 25 ஜனவரி 2014 (16:28 IST)
மோகன்லாலின் த்‌ரிஷ்யம் கேரள பாக்ஸ் ஆபிஸ் ச‌‌ரித்திரத்தையே மாற்றி எழுதியிருக்கிறது. பாலசந்தர் லால் போன்ற நடிகர்கள் உலகத்திலேயே மூணு நாலு பேர்தான் இருப்பார்கள் என பாராட்டுகிறார். இப்படியொரு சூழலில் திருஷ்டிப் பொட்டாக வந்தது ‌ஜில்லா.
FILE

நமக்குதான் அது திருஷ்டிப் பொட்டு. லாலுக்கு கோடிகளில் லாபம் சம்பாதித்து தந்தது. அந்த துரதிர்ஷ்டம் மேலும் தொடரயிருப்பதுதான் விஷயமே.

2012 ல் மோகன்லால் நடித்த ஐந்து மலையாளப் படங்களில் ஒன்று கர்மயோதா. ஐந்தில் இந்தப் படம்தான் அட்டர் ப்ளாப். மேஜர் ரவி இயக்கிய இந்த அட்டர் ப்ளாப்பை வெற்றிமாறன் ஐ.பி.எஸ். என்ற பெய‌‌ரில் தமிழில் வெளியிடுகிறார்கள்.

FILE

2012 ல் வெளியான ரஞ்சித்தின் ஸ்பி‌ரிட் படத்தை டப் செய்திருந்தால் தமிழக ரசிகர்களும் மதுவின் தீமையை உணர்ந்திருப்பார்கள். இல்லாவிட்டால் ரன் பேபி ரன் அல்லது கிராண்ட் மாஸ்டர் ஏதாவது ஒன்றை டப் செய்திருக்கலாம். தேறாது என்று கைகழுவிய கர்மயோதாவை தமிழில் மொழிமாற்றம் செய்து தமிழ் ரசிகர்களையும் வதைக்க வேண்டுமா?

வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.ஸை ‌ஜில்லா புகழ் மோகன்லால் என்று வேறு விளம்பரப்படுத்துகிறார்கள்.

கரன்சிக்குப் பின்னால் போகும் போது இப்படிப்பட்ட களங்கத்தையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்