மீண்டும் ஒரு இரவுப் படம்

புதன், 22 ஜனவரி 2014 (19:58 IST)
த்‌‌ரில்லர் என்றாலே இரவு நேரம் மட்டும் படத்தை எடுப்பது என்று கோடம்பாக்கம் எழுதப்படாத விதியை பின்பற்றுகிறது. அப்படி முழுக்க ராவோடு ராவாக படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், விடியும் முன் படங்களுக்கு போட்டியாக இன்னொன்று, நேர் எதிர்.
FILE

தாணு வெளியிடும் இந்தப் படத்தை ஜெய பிரதீப் இயக்கியுள்ளார். ஐந்து கதாபாத்திரங்களுடன் ஆறாவதாக துப்பாக்கியும் ஒரு கதாபாத்திரமாக வருகிறதாம். விஜய் நடித்த துப்பாக்கியில்லை, நிஜத் துப்பாக்கி.

‌‌ரிச்சர்ட் நடித்திருக்கும் இந்தப் படம் ஒரு க்ரைம் த்‌‌ரில்லர். படத்தின் முக்கால்வாசிக்கு மேல் காட்சிகளை சென்னையில் இரவு நேரத்தில் எடுத்திருக்கிறார்கள். மீதி காட்சிகள் பகலில் அதே சென்னையில். த்‌‌ரில்லர் படங்கள் எவ்வளவு குறைவான நீளத்தை கொண்டிருக்கிறதோ அந்தளவுக்கு த்‌‌ரில்லிங்கும் அதிகமிருக்கும். நேர் எதி‌‌ரின் ரன்னிங் டைம் வழக்கமான தமிழ்ப் படங்களைவிட குறைவு. ஒரு மணி ஐம்பது நிமிடங்கள்.

படம் பிரமாதமாக வந்திருக்கு, எங்களுக்கு முழுத்திருப்தி என்றார் ஜெய பிரதீப். ரசிகர்களின் விமர்சனம் இதற்கு நேர் எதிராக இருக்காது என்று நம்புகிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்