கமலுடன் கே.பாலசந்தர் நடிக்கிறார்!

வியாழன், 16 ஜனவரி 2014 (11:02 IST)
கமல் நடிக்கும் ’உத்தம வில்லன்’ என்ற படத்தில் இயக்குனர் கே. பாலசந்தர் சேர்ந்து நடிக்க இருக்கிறார். தனது ஒவ்வொரு மேடைகளிலும் ரஜினி, கமல் இருவரையும் இணைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்ற தனது ஆசையை கூறி வந்த நிலையில், தற்போது கமலுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்திருக்கிறது.
FILE

இந்த படம் கமலின் வருகைக்காகத்தான் காத்திருக்கிறது. கமல் தற்போது ‘விஸ்வரூபம்-2 வெளியிடுவதற்கான வேலையில் இருக்கிறார். அது முடிந்து ரிலீஸானதும், அடுத்த படமாக ’உத்தம வில்லன்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

பாலசந்தர் சாருக்கு வித்தியாசமான, மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் தாடியை எடுக்காமல் வளர்க்க சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனரான ரமேஷ் அரவிந்த். ‘ரெட்டை சுழி’ படத்துக்குப் பின்னல்
பாலசந்தர் நடிக்கும் படம் இது.

வெப்துனியாவைப் படிக்கவும்