மோகன்லாலின் மிஸ்டர் ஃபிராட்

ஞாயிறு, 12 ஜனவரி 2014 (13:20 IST)
மோகன்லாலின் ஜில்லா (கேரளாவில் அப்படிதான் பாஸ் சொல்றாங்க) கேரளாவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. இருநூறுக்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது. மோகன்லால் சம்பளமாக வாங்கியிருந்தால் கிடைக்கிற கோடியைவிட பல மடங்கு அதிகம் அவரின் ஜில்லா கேரளா உரிமை சம்பாதித்து தரும். ஆனால் பெயர்...?
FILE

த்ரிஷ்யம் போன்ற சிறந்தப் படத்துக்குப் பிறகு சிவன்டா என்று பன்ச் பேசும் மோகன்லாலை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு, மிஸ்டர் ஃப்ராட். மோகன்லால் நடிக்கும் புதிய படமிது.


சுறா படத்தில் விஜய்யின் வில்லனாக நடித்த தேவ் கில் மிஸ்டர் ஃப்ராடில் மோகன்லாலின் வில்லனாக நடிக்கிறார். இயக்கம் பி.உன்னிகிருஷ்ணன். ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்து இயக்குனராக மாறியவர் உன்னிகிருஷ்ணன். மோகன்லாலை வைத்து 2008 ல் மாடாம்பி என்ற நல்ல படத்தை தந்தார். 2012 ல் கிராண்ட் மாஸ்டர். இவர்கள் இணையும் மூன்றாவது படம் மிஸ்டர் ஃபிராட்.

தமிழ் புத்தாண்டில் (அவர்களுக்கு விஷு) படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்