மஞ்சப்பையிலிருந்து விலகினார் ஜிப்ரான்

வெள்ளி, 10 ஜனவரி 2014 (18:15 IST)
விமல் நடிக்கும் மஞ்சப்பை படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார் ஜிப்ரான். அவருக்குப் பதில் ரகுநந்தன் இசையமைக்கலாம் என்கிறார்கள்.
FILE

விமல், லட்சுமிமேனன், ரா‌ஜ்கிரண் நடித்து வரும் படம் மஞ்சப்பை. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பதாக இருந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மஞ்சப்பை படத்திலிருந்து விலகுவதாக ஜிப்ரான் தெ‌ரிவித்தார். அவருக்குப் பதில் ரகுநந்தன் இசையமைக்கலாம் என தெ‌ரிகிறது.

களவாணி, வாகை சூடவா படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஜிப்ரான் விஸ்வரூபம் 2 படத்தின் பின்னணி இசையை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்