ஹன்சிகாவின் நாங்க எல்லாம் அப்பவே அப்படி

வெள்ளி, 10 ஜனவரி 2014 (15:43 IST)
பாடல் வரிகளை படத்தலைப்பாக்கியவர்கள் இப்போது படங்களின் புகழ்பெற்ற வசனங்களை படத்தின் பெயராக்கி வருகிறார்கள். நண்பேன்டா, நீ எல்லாம் நல்லா வருவடாவை தொடர்ந்து இன்னொரு படம், நாங்க எல்லாம் அப்பவே அப்படி.
FILE

தெலுங்கில் ஹன்சிகா, விஷ்ணு மோகன்பாபு நடிப்பில் வெளியான படம் தேனிகாய்னா ரெடி. தெலுங்கில் சுமாராகப்போன இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். படத்தின் தமிழ் வசனங்களை ஏ.ஆர்.கே.ராஜராஜா எழுதியுள்ளார்.

நாகேஸ்வர ரெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் பிரபு நடித்துள்ளார். கதைப்படி பிரபுவின் மகளாக வருகிறாராம் ஹன்சிகா. பிரபுவின் தங்கை கணவராக சுமன் நடித்துள்ளார்.

ஹன்சிகாவுக்கு தமிழகத்தில் இருக்கும் க்ரேஸ் காரணமாக தேனிகாய்னா ரெடியை தமிழ் பேச வைக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்