பென்சில் பிரகாஷ்

வியாழன், 26 டிசம்பர் 2013 (16:10 IST)
என் நெருங்கிய நண்பரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷை முதலில் பென்சில் படத்துக்கு இசையமைக்க வைக்கும் எண்ணத்தில்தான் அவருடைய ஸ்டுடியோவுக்கு போனேன். அவரும் நானும் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டதுதான் அவரையே ஹீரோவாக்கும் யோசனை. தயங்கியபடியே சொன்னதும், உடனே ஓகே சொல்லிவிட்டார். அன்று முதல் வேலையைத் தொடங்க ஆரம்பித்து விட்டேன்.
FILE

இந்த டைட்டிலை கேள்விப் பட்ட பலரும் எதற்காக இந்த பெயர் என்கிறார்கள். பென்சில் என்றால் எழுதிய வார்த்தை வேண்டாமென்றால் அழித்து விட்டு மீண்டும் எழுதிக் கொள்ளலாம். அப்படித்தான் பள்ளிப் பருவத்தில் செய்யப்படும் தவறுகளை திருத்திக் கொள்ளவும், மாற்றியமைக்கவும் வழியிருக்கிறது என்று சொல்வதற்காகத்தான் இந்த பெயர் வைத்திருக்கிறேன். படம் வந்தால் இது எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பது தெரியும் என்கிறார் இயக்குனர் மணி நாகராஜ்.

வெப்துனியாவைப் படிக்கவும்