திருடப்பட்ட கதை, நஷ்டஈடு தந்த சுசீந்திரன்

திங்கள், 23 டிசம்பர் 2013 (12:47 IST)
பாண்டியநாடு ஐம்பது நாட்களை பூர்த்தி செய்திருக்கிறது. நெடுநாட்களுக்குப் பிறகு வெற்றியை ருசி பார்த்திருக்கிறார் விஷால். சுசீந்திரன் இயக்கியிருந்த இந்தப் படம் தயாரித்த விஷாலுக்கு லாபத்தையும், வெளியிட்ட வேந்தர் மூவிஸுக்கு பெரிய லாபத்தையும் தந்திருக்கிறது.
FILE

பாண்டியநாடு படத்தின் கதை என்னுடையது, சுசீந்திரன் நான் சொன்ன கதையை என்னிடம் சொல்லாமலே படமாக்கிவிட்டார் என புவனராஜா என்பவர் புகார் சொன்னது நினைவிருக்கலாம். இந்த பஞ்சாயத்தின் போது சில பூதங்களும் வெளிப்பட்டன. சுசீந்திரன் இந்தக் கதை என்றில்லை எல்லா கதைகளையுமே இப்படி சுற்றமும் நட்பிடமிருந்தும் சுட்டுதான் எடுத்திருக்கிறார். முன்பு ஏமாந்தவர்கள் பாண்டியநாடு விஷயத்தில் ஒன்றுதிரள, கடைசியில் வேறு வழியில்லாமல் புவனராஜாவுக்கு நஷ்டஈடாக சில லட்சங்களை தந்திருப்பதாக கூறுகிறார்கள்.

ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கதையும் இப்படி சுட்டு எடுக்கப்பட்டதே. அந்தப் படத்தை முதல் காப்பி அடிப்படையில் எடுத்துக் கொடுத்த சுசீந்திரன் பல கோடிகளை சம்பாதித்தது இன்டஸ்ட்ரிக்கே தெரிந்த ரகசியம். இந்த சம்பாத்தியத்தின் பின்னுள்ளது யாரோ ஒருவருடைய கதைதானே. அவர்களுக்கு கோடிகளில் சம்பாதிப்பவர் சில லட்சங்களை தந்தால் என்ன?
FILE

இனிமேல் திரைமறைவு ஆட்டத்துக்கு வழியில்லை என்பதால் யார் கதை தந்தாலும் காசு தருவது என்ற நல்ல முடிவை சுசீந்திரன் எடுத்திருப்பதாகவும் கூறுகிறார்கள் (பணம் மட்டும்தான் கிடைக்கும். படத்தின் கதை என்று சுசீந்திரனின் பெயர்தான் வரும்).

வெப்துனியாவைப் படிக்கவும்