பாடல்கள் இல்லாத படத்துக்கு இளையராஜா இசை

வெள்ளி, 7 ஜூன் 2013 (19:06 IST)
FILE
தமிழில் கதைகள் இல்லாத படங்கள் வருடம்தோறும் இரண்டு டஜன்களாவது வெளியாகும். பாடல்கள் இல்லாத படங்கள் அ‌ரிது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் பாடல்கள் இல்லை.

மிஷ்கின் படத்துக்கு பாடல்கள் வேகத்தடை. அதனால் டூயட் பாடலுக்குப் பதில் டாஸ்மாக் மற்றும் கானா பாடலை முதன்மைப்படுத்துவார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை முழுக்க அவரது முத்திரையில் உருவாக்குவதால் பாடல்களுக்கு அங்கு இடமில்லை.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜஇசை. பாடல்கள் இல்லாத படத்துக்கு ஏற்கனவே இளையராஜா இசையமைத்திருக்கிறார். கமல் தயா‌ரிப்பில் சத்யரா‌ஜ் நடித்த மலையாள ஆவநாழி படத்தின் ‌ரீமேக்கான கடமை கண்ணியம் கட்டுப்பாடு. கால் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது மிஷ்கின் படம்.

மிஷ்கின் தனது படத்தின் ட்ரெய்லருக்கு ஆஸ்திரேலிய இசையமைப்பாள‌ரின் சிம்பொனியை பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்