ராஜாவின் ‌‌ரீமேக் வட்டத்தில் கார்த்தி

வியாழன், 23 பிப்ரவரி 2012 (17:47 IST)
சொந்த பேனர், சொந்த தம்பி என்று குடும்பத்திற்குள் வண்டியோட்டிய ஜெயம் ராஜா வேலாயுதம் படத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இவ‌ரின் அடுத்தப் படத்தில் நடிக்கயிருப்பவர் கார்த்தி.

குடும்பத்திலிருந்து வெளியேறினாலும் ‌‌ரீமேக்கிலிருந்து ராஜஇன்னும் விலகவில்லை. கார்த்தியை வைத்து இவர் இயக்கப் போவது ஒரு குடும்பச் சித்திரம். வழக்கம்போல இதுவும் ‌‌ரீமேக்தான் என்கிறார்கள்.

சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்து வரும் கார்த்தி இவ்விரு படங்களுக்குப் பிறகு ராஜாவின் ‌‌ரீமேக் குடும்ப சென்டிமெண்டில் நடிக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்