பூமிகா தெலுங்கில் தயாரித்தப் படம் தகிட தகிட. 40 புதுமுகங்கள் நடித்திருந்த இந்தப் படத்தை துள்ளி எழுந்தது காதல் என்ற பெயரில் பூமிகா தமிழில் ரீமேக் செய்கிறார்.
கேம்ப்பஸ் கதையான இதனை ஸ்ரீ ஹரி நானு என்பவர் இயக்குகிறார். முக்கியமான வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். ராஜா, ஹரிப்ரியா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
பத்ரி படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமான பூமிகா தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாவது இதுதான் முதல்முறை.