மங்காத்தா - ஒஸ்தியை ஒதுக்கி வைத்த சிம்பு

வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:44 IST)
சிம்பு தீவிர அ‌ஜீத் ரசிகர். தனது படங்களில் தலயை வாழ்த்தி சீன் வைப்பவர். வெளிப்படையாக அவரை ஆத‌ரிப்பவர், ஆராதனை செய்பவர்.

மங்காத்தா படத்தைப் பற்றி இவர்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் பேட்டி கொடுத்து வருகிறார். சென்னையில் அதுவும் ரசிகர்களுடன் மங்காத்தா பார்ப்பதற்காக படப்பிடிப்பையே கேன்சல் செய்திருக்கிறார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள்.

மைசூரில் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது 31 ஆம் தேதி மங்காத்தா ரிலீஸானதை முன்னிட்டு ஒஸ்தியை ஒதுக்கி வைத்து சென்னைக்கு பறந்து வந்திருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகுதான் சிம்புவின் ஆர்வம் அடங்கியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்