இந்த வருடம் வெளியான அனைத்துப் படங்களின் ஓபனிங்கையும் அடித்து நொறுக்கியிருக்கிறது மங்காதா. அஜீத்தின் சினிமா கேரியரில் இதுதான் மகத்தான வெற்றி, சந்தேகமில்லை.
பண்டிகை தினத்தில் மங்காத்தா வெளியானது. அடுத்தடுத்த தினங்களும் பண்டிகை. கூடுதலாக வார இறுதி. திரையரங்கில் கூட்டம் அம்முகிறது. எந்திரன் திரைப்படத்துக்குப் பிறகு இப்படியொரு கூட்டத்தை திரையரங்கு இப்போதுதான் அனுபவப்படுகிறது.
இந்த வருடம் வெளியான கோ, அவன் இவன் படங்கள் வெளியான முதல் மூன்று தினங்களில் 89 லட்சங்கள் சென்னை மாநகரில் வசூலித்தன. இதுவே அதிகபட்ச ஓபனிங். இதனை மங்காத்தா முந்தியிருக்கிறது. சென்னையில் மட்டும் இப்படம் எட்டு கோடிவரை வசூலிக்கும் என்கிறார்கள்.
ஏபிசி என்ற பார்டர்களைத் தாண்டி எல்லா சென்டர்களிலும் மங்காத்தா பிய்த்துக் கொண்டு செல்கிறது. உண்மையில் இதுதான் திரையுலகின் பிரமாண்ட உற்சவம். வேலாயுதம் இந்த பிரமாண்டத்தை தாண்டிச் செல்லுமா என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.