தமிழில் வெளியாகும் 90 சதவீதப் படங்கள் பிறமொழிப் படங்களின் அதிகாரப்பூர்வ தழுவலாகவோ திருட்டுத்தனமான காப்பியாகவோ உள்ளன. சமீபத்திய காப்பி, ஆண்மை தவறேல்.
அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இந்தப் படம் லுக் பெஸானின் திரைக்கதையில் வெளிவந்த டேக்கன் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. இளம் பெண்களை விபச்சாரச் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் மகளை மீட்கும் தந்தையை பற்றியது டேக்கன். இதில் தந்தைக்குப் பதில் காதலன். மற்றபடி அதே ஹாலிவுட் படம்.
திருட்டு விசிடிக்கு எதிராக பேசும் திரைத்துறையினர் திருட்டு விசிடி படங்களையும் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.