நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கையுமாக மத்திய, மாநில அரசுகளின் இருண்ட திரைகளை கிழிக்க ஆரம்பித்துவிட்டார் சீமான். தேர்தலில் வேறு நிற்பதால் சினிமா சீமான் காணாமல் போய்விடுவாரோ என்பது அவரது நலம் விரும்பிகளின் அச்சம்.
ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்துள்ளார் சீமான்.
தேர்தல், பிரச்சாரம், போராட்டம் இவற்றுக்கு நடுவில் அடுத்தப் படத்தை தொடங்கயிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனது அடுத்தப் படம் பகலவன் என்பதையும், விஜய் ஹீரோவாக நடிப்பார் என்பதையும் சீமான் உறுதிப்படுத்தியுள்ளார்.