யோதாவில் லட்சுமிராய்

திங்கள், 6 டிசம்பர் 2010 (14:36 IST)
பல வருடங்கள் முன் மோகன்லால், ஜெகதி ஸ்ரீகுமார், மதுமிதா, ஊர்வசி நடிப்பில் வெளியான படம் யோதா.

ரோஜாவுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை மோகன்லால் காப்பாற்றுவது போன்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

இந்தப் படத்தில் நடிக்க லட்சுமிராய் ஒப்பந்தமாகியுள்ளார்.

மோகன்லாலுடன் இவர் மேலும் இரு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்