கமல் வழியில் அனுஷ்கா

வெள்ளி, 3 டிசம்பர் 2010 (14:45 IST)
எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த விளம்பரங்களில் நியாயமான அக்கறையுடன் நடித்துக் கொடுப்பவர் கமல்ஹாசன். எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளின் நலத்துக்காக விளம்பரங்களில் நடிக்கப் போவதாகவும் அவர் சமீபத்தில் தெ‌ரிவித்தார்.

கமலைப் போலவே எய்டஸ் பிரச்சனையில் நிஜமான அக்கறையுடன் பேசி வருகிறார் அனுஷ்கா. சமீபத்தில் ஆந்திராவில் இளைஞர்கள் மத்தியில் பேசிய இவர், இளையவர்கள் செல்போன் வைத்திருப்பதைப் போல் காண்டமும் வைத்திருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாதவர்களை எய்ட்ஸிலிருந்து கட்டுப்படுத்தவே இந்த யோசனையை அனுஷ்கா தெ‌ரிவித்தார்.

ஆந்திராவில் இந்து மக்கள் கட்சி இல்லை என்பதால் யாரும் அனுஷ்காவின் பேச்சுக்கு எதிராக முண்டா தட்டவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்