எஸ்.எஸ்.குமரன் இசையில் சிம்பு

திங்கள், 28 ஜூன் 2010 (17:56 IST)
தான் நடிக்கும் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜஇசையமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார் சிம்பு. ரஹ்மான் மட்டும் விதிவிலக்கு. வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்தால் பாதியில் அவர் பணி கிழிக்கப்படும்.

இதற்கு ப‌ரிகாரமாகவா தெ‌ரியவில்லை. எந்த இசையமைப்பாளர் அழைத்தாலும் ஓடிச் சென்று அவர் இசையில் பாடுகிறார். சமீபத்தில் சிம்பு குரல் கொடுத்தது நெல்லு படத்துக்காக.

பூ படத்துக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் தற்போது புதுமுகங்கள் நடிக்கும் நெல்லு படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் சிம்பு. நீங்கள் ஒரு பாடல் பாட வேண்டும் என்று கேட்ட உடனேயே ஒப்புக்கொண்டு சின்சியராக பாடி கொடுத்திருக்கிறார் சிம்பு.

சிம்பு என்றால் சின்சியர் என்று அவரது புகழை பாடிக் கொண்டிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்