அசுரகுலம்

வெள்ளி, 25 ஜூன் 2010 (13:56 IST)
திரையுலகில் இரண்டு தந்தைக்குலங்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் படம் பண்ணவில்லையென்றால் அவர்களால் தூங்கமுடியாது, சாப்பிட முடியாது, கை கால் நடுக்கமெடுத்துவிடும். சினிமா மீது அவர்களுக்கு அத்தனை காதல், இல்ல வெறி. ஒருவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். மற்றவர் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா.

இந்த முறை கஸ்தூரி ராஜா டைரக் ஷன் பொறுப்பை இயக்குநர் கார்த்திக் பாலாஜியிடம் கொடுத்துவிட்டு தயாரிப்பை மட்டும் கவனித்துக்கொள்கிறார். படத்தின் பெயர் அசுரகுலம். இளங்குற்றவாளிகளையும் அவர்களை எது அந்த நிலைக்குத் தள்ளுகிறது என்பதையும் மையமாகக் கொண்டு நறுக்கென படம் பண்ணப் போகிறாராம் பாலாஜி.

வெப்துனியாவைப் படிக்கவும்