கற்பு - குஷ்புக்கு ஆதரவாக தீர்ப்பு

வியாழன், 29 ஏப்ரல் 2010 (14:19 IST)
கற்பு குறித்து குஷ்பு தெ‌ரிவித்த கருத்துகள் சட்டத்துக்கு உ‌ட்பட்டவை என்று தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர் மீதான 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

2005 ஆம் ஆண்டு பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, படித்த ஆண்கள் தனக்கு மனைவியாக வருகிற பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்று தெ‌ரிவித்தார். மேலும், திருமணத்துக்கு முன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் கர்ப்பம் ஆகாமலும், பால்வினை நோய்கள் தாக்காமலும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தெ‌ரிவித்திருந்தார்.

குஷ்புவின் இந்த கருத்துகள் தமிழ் கலாச்சாரத்தை களங்கப்படுத்துவதாகக் கூறி பல்வேறு இடங்களில் அவருக்கெதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குஷ்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் குஷ்பு.

இதனை விசா‌ரித்த நீதிபதிகள், குஷ்பு அரசியல் சட்டத்துக்கு புறம்பாக எதையும் கூறவில்லை, அவர் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து, திருமணத்துக்கு முன் இரண்டு பேர் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி தவறாகாது என்று தங்களது தீர்ப்பில் கூறியதோடு குஷ்பு மீதான 22 வழக்குகழையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்