சிந்துமேனன் காதல் திருமணம்

புதன், 28 ஏப்ரல் 2010 (13:40 IST)
நடிகை சிந்துமேனன் தான் நெடுநாளாக காதலித்து வந்த சாஃப்ட்வேர் இன்‌ஜினியர் பிரபுவை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் பெங்களூருவில் நடந்தது.

திருச்சூர் மலையாளியான சிந்துமேனன் பெங்களூருவில் தனது படிப்பை முடித்தார். பிறகு அவர்கள் குடும்பம் பெங்களூருவிலேயே செட்டிலானது. பெங்களூருவில் இருந்தபடியே மலையாளம், தமிழ் இரு மொழிகளிலும் அவர் நடித்து வந்தார். சமீபத்தில் அவர் நடித்த தமிழ்ப் படம் ஈரம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிந்துமேனன், பிரபு திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் பெங்களூருவில் நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஈரம் இயக்குனர் அறிவழகன், நடிகர் நந்தா உள்ளிட்ட சில திரையுலகினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்