யானா குப்தா, மந்த்ரா பேடி போன்ற இந்தி இளங்காத்து தமிழ் பக்கம் வீசியதற்கு சிம்புவே காரணம். சானியா மிர்சாவையும் ஹீரோயினாக்க அவர் எடுத்த முயற்சி அவரது மகத்தான தோல்விகளில் ஒன்றாக முடிந்தது.
கே.வி.ஆனந்தின் கோ படத்திலிருந்து சிம்பு விலகியதற்கு தமன்னாவை ஒப்பந்தம் செய்யாததே காரணம் என்றொரு பேச்சும் இருக்கிறது. எப்படியோ, நாயகி விஷயத்தில் இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி வெற்றியும், தோல்வியும் சரிவிகிதத்தில் கலந்தே சிம்புவுக்கு கிடைத்திருக்கிறது.
சிம்பு இயக்கி நடிக்கும் வாலிபன் படத்தில் வரலட்சுமி, ஸ்ருதிஹாசன் தொடங்கி இலியானா, தமன்னா வரை பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், இறுதியில் சிம்பு டிக் செய்திருப்பது அசினை என்கின்றன தகவல்கள்.
இந்தியில் கோட்டை கட்டலாம் என்று நினைத்த அசினை கட்டம் கட்டி விட்டது பாலிவுட். பொழுது போகாமல் இருப்பதற்கு தமிழ், தெலுங்கில் நடிக்கலாமே என்று இறங்கி வந்திருக்கிறார்.
விஜய்யின் 51வது படத்தில் இவர்தான் ஹீரோயின். சித்திக் இந்தப் படத்தை இயக்குகிறார். அவர் தமிழில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் இன்னொரு படம், வாலிபன் என்கிறார்கள்.