யாவரும் கேளிர் - கமலின் புதிய படம்

திங்கள், 4 ஜனவரி 2010 (13:37 IST)
கமலின் புதிய படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. காமெடியை பின்புலமாகக் கொண்ட படம் என்றாலும் மிகப் பிரமாண்டமாக உருவாகயிருக்கிறதாம்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குகிறார். கதை கமல் என்கிறது அவரது அலுவலக வட்டாரம்.

படத்தில் கமல் ஜோடியாக நடிப்பவர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நயன்தாரா, த்‌ரிஷபெயர்கள் அடிபடுகின்றன. தமன்னாவின் பெரும் லிஸ்‌ட்டில் உள்ளது.

யாவரும் கேளிர்... இதுதான் படத்துக்கு வைத்திருக்கும் பெயர். படத்தின் பெயரே காமெடியை‌த் தாண்டி படம் ஏதோ சொல்லப் போகிறது என்பதை உணர்த்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்