கந்தசாமி ஏற்படுத்திய கலக்கம்

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (19:57 IST)
இந்த மாதம் திரைக்கு வருகிறது கந்தசாமி. மெகா பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி, படத்தை தயா‌ரித்திருப்பவர் தாணு என்பதற்காகவே பயப்படுகிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.

விளம்பர விஷயத்தில் தாணு ஒரு டைனசர். சுற்றியுள்ள அனைத்தையும் துவ‌ம்சம் செய்துவிடுவார். கந்தசாமியோ அவர் தயா‌ரித்த படங்களில் மிகப் பிரமாண்டமானது. விளம்பரத்தில் அவர் ஆடப்போகும் சிவதாண்டவத்தை கற்பனை செய்தே கதிகலங்கிப் போயிருக்கிறது கோடம்பாக்கம்.

பிரதான விஷயம் வேறு. கந்தசாமிக்கு ஏறக்குறைய 1000 பி‌ரிண்டுகள் போடுகிறார்கள். இதில் தமிழுக்கு மட்டும் 600க்கும் மேல் என்கின்றன தகவல்கள். இம்மாதம் வெளியாகும் படத்துக்காக தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த திரையரங்குகள் அனைத்திற்கும் அட்வான்ஸ் கொடுத்திருப்பதாக கேள்வி. அதுவும் எத்தனை நாட்களுக்கு? ஏறக்குறைய ஐம்பது நாட்களுக்கு.

ஆயிரத்தில் ஒருவனோ, உன்னைப்போல் ஒருவனோ... எந்தப் படமாக இருந்தாலும் சில வாரங்களுக்கு சுமாரான திரையரங்கைக்கூட கற்பனை செய்ய முடியாது. கந்தசாமி ஓடி தேய்ந்தால்தான் வேறு எந்தப் படத்துக்கும் வெள்ளித்திரையே கிடைக்கும். கமல் படத்துக்கே இந்த நிலை என்றால் மற்ற படங்கள் பற்றி கற்பனை செய்து பாருங்கள்.

ஆடிப் பெருக்குக்கு திறந்துவிட்ட அணை மாதி‌ி படங்கள் ஜூலை மாதம் மதகு உடைத்து ‌ரிலீஸானதுக்கு இதுவும் ஒரு காரணமாம். கந்தசாமி வெளிவந்தால்தான் பல படங்களுக்கு ‌ரிலீஸ் தேதியே முடிவு செய்யப்படும். சாமின்னாலே பிரச்சனைதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்